Month: December 2009
-
தமிழ்த்திரைப்பாடல்கள் – 2009
இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்குமார் ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன. தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து,…
-
குந்தா (kundah)
சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும்…
