Month: September 2009
-
What’s your rashee? (2009)
ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not? WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும்…
-
உன்னைப்போல் ஒருவன் (2009)
ஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும். ”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர்…
-
துபாய் மெட்ரோ பராக்!
’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது. நீண்டு நெளிந்து வளைந்து…
