இட்லி(ப்)பா!

அன்புமிகு அமீரக வாசத்தீர்!

மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர்
சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர்
வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர்

நினைத்தாலே மனம் குதூகலிக்கும்
எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா
நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே!

இளமஞ்சள் நிறத்தினதாய்
இதயத்தை உருக்குவதாய்
பதமாய் வார்த்துவைத்த
இதமான இட்டிலிகள்
இரண்டேனும்
உண்டீரேல் அன்பரே
அமிர்த்தமதை பூமியில் உண்ட
ஆனந்தம் பெருவீரே!

அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!

15 responses to “இட்லி(ப்)பா!”

  1. குசும்பன் Avatar
    குசும்பன்

    சொன்னா நம்ப மாட்டேங்கிறானுங்க சங்கர்:(

  2. //நினைத்தாலே மனம் குதூகலிக்கும்
    எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா
    நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே!//

    ஆஹா!

    //இளமஞ்சள் நிறத்தினதாய்
    இதயத்தை உருக்குவதாய்
    பதமாய் வார்த்துவைத்த
    இதமான இட்டிலிகள்
    இரண்டேனும்//

    படிக்கும்போதே ஆசையா இருக்கு!

  3. என் மாப்பி குசும்பன் ஒருத்தன் தான் கிளம்பிருக்கான்னு நினைச்சேன். இப்ப தான்யா தெரியுது ஒரு குரூப்பாத்தான் கிளம்பிருங்காய்ங்க.

    இன்னும் எத்தனை இருக்காய்ங்க உங்க சங்கத்துல? சொல்லிடுங்கப்பு. நாங்க அப்டியே எஸ்ஸாயிருவோம்ல.

  4. கவிதை சூப்பரா இருக்கு!

    இட்லி!?

  5. ஜீவ்ஸ் Avatar
    ஜீவ்ஸ்

    நாளைக்கு நான் ரவா தோசை சுட்டதையும் இப்படி கவிதையா வடிப்பீங்களா :))

  6. நான் உப்புமா செய்யப் போறேன்!

  7. வால்பையன் Avatar
    வால்பையன்

    இட்லி சாப்பிட்ட எபெக்ட் இப்படி வேலை செய்யுதா!?

    வேற என்னன்னவெல்லாம் தோணுது!
    வடை சுட்டு திங்கணும்னு தோணுமே! தோணனும் அதான் குசும்பன்! அப்புறம் உடம்ப பத்திரமா பார்த்துகோங்க.

    ஈனோ போட்டா என்னாகும்னு உங்களுக்கு சரியா தெரியல!

  8. குசும்பன் இட்லி செஞ்சாராம் அது மல்லிப்பூ போல மென்மையா இருந்ததாம் அதை சாப்பிட்டுவிட்டு இவரு கவிதை வேறெ எழுதியிருக்காரு. ம்ம்… எல்லாம் நேரந்தேன்.

    கவிதையை குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன் என ஒரு வரி போட்டுவிடவும். கோவிச்சுக்க போறார்.

    வாழ்த்துகள் சிவா

  9. ஆல் பேட் பாய்ஸ் எல்லாம் இங்க வந்தாச்சா? உங்களை எல்லாம்!

    இட்டலிக்கு கவிதை எழுதிகிறார் என்றால் அதன் சுவையை கொஞ்சம் நினைத்து பாருங்க பேட் பாய்ஸ்!

  10. மின்னுது மின்னல் Avatar
    மின்னுது மின்னல்

    அமிர்த்தமதை பூமியில் உண்ட
    ஆனந்தம் பெருவீரே
    தேவலோகம் சென்று
    வாழ்வீரே..!!!

    இப்படி முடிச்சியிருக்கலாம்

    🙂

  11. மின்னுது மின்னல் Avatar
    மின்னுது மின்னல்

    இட்டலிக்கு கவிதை எழுதிகிறார் என்றால் அதன் சுவையை கொஞ்சம் நினைத்து பாருங்க பேட் பாய்ஸ்!
    //

    ஊசி போன வடைக்கு கூடதான் யாராவது கவுஜ எழுதும் அதுக்காக
    நல்லாயிருக்குனு சொல்லிட முடியுமா..?

  12. மின்னுது மின்னல் Avatar
    மின்னுது மின்னல்

    குசும்பனுக்கு தைரியம் இருந்தால் பதிவர் சந்திப்புக்கு அந்த இட்லியை கொண்டு வரவும்..

  13. சிவா..

    உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி வாய் மற்றும் நாக்கு பகுதிகளை பரிசோதித்துக் கொள்ளவும்.

    காலம் கெட்டுப் போய்க் கெடக்கு..!

  14. இட்லியும் இனிதுடத்து இப்புவியில்
    சட்னியுடன் சாலப் பரிந்து

    என்பது வள்ளுவன் எழுத விட்டுப்போன குறள்.

    http://kgjawarlal.wordpress.com/
    kgjawarlal@yahoo.com

  15. கருத்துக்கள் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Leave a comment