Month: July 2009
-
இட்லி(ப்)பா!
அன்புமிகு அமீரக வாசத்தீர்! மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர் சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர் வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர் நினைத்தாலே மனம் குதூகலிக்கும் எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே! இளமஞ்சள் நிறத்தினதாய் இதயத்தை உருக்குவதாய் பதமாய் வார்த்துவைத்த இதமான இட்டிலிகள் இரண்டேனும் உண்டீரேல் அன்பரே அமிர்த்தமதை பூமியில் உண்ட ஆனந்தம் பெருவீரே! அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!
-
ஓய் (oye)!
நான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த ‘அஞ்சி’ .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation & composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு படத்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே…
-
சில இசைக்குறிப்புகள்
கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ? ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக…
