Month: June 2009
-
எக்ஸலன்ட்- பா.ரா.
தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.! சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட…
-
துபாய் பதிவர் சந்திப்பு – 05-06-09
(இடையில் ஏற்பட்டுவிட்ட ஒரு எதிர்பாராத பயணத்தின் காரணமாக மிகத் தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.) பதிவர் சந்திப்புகள் ஒன்றிலும் நான் இதுவரையில் கலந்துகொண்டதில்லை. ஆர்வம் நிறைய இருந்தது. ஆனால் பயணம்,நிகழ்வுக்கான நேரம் ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதிய பதிவர்கள் அழைத்திருக்கிறார்கள் போகலாமா என்று குசும்பன் (என்றும் அழைக்கப்படுகிற சரவணன் ) கேட்டபோது மகிழ்வோடு ஒத்துக்கொண்டேன். சுற்றிலும் வேப்பமரங்கள் அடர்ந்த புல்வெளியில் கராமா பார்க்கில் நிகழ்ந்த்து சந்திப்பு. அருகிலேயே வசிக்கும் திரு.சுந்தர் வலைப்பதிவு கூட்டத்திற்கெனவே பிரத்தியேகமாக…
-
srirangam chronicles-2-திருவெறும்பூர் கரும்பு மக்கள்
2558 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று திருச்சி மக்களவைத்தொகுதியில் டெபாசிட் இழந்த லதிமுக வேட்பாளர் மன்சூர் அலிகானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் இரண்டு.
