’முரளி கடையில ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம் தம்பி’. கிடைக்க கடினமான ஒரு முக்கியமான டாக்டர் அப்பாயின்மெண்ட்டிற்காக விடியற்காலையில் புறப்பட்ட நேரத்தில் ஆட்டோக்காரனிடம் அப்பா மேற்கண்ட வாக்கியத்தை சொன்னவுடன் சற்றே கோபம் வந்தது முதலில். ஆனால் அந்த நொடியில் நினைத்திருக்கவில்லை ஒவ்வொரு முறையும் அந்த கடையை எவ்வளவு அவசரமாய் கடந்து சென்றாலும் நிதானித்து ஒரு காபி சாப்பிடமால் போவதில்லை என்பதை.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு வெகு அருகே அம்மாமண்டபம் சாலையையும், காந்தி சாலையயும் இணைக்கும் முனையில் பெயரிடப்படாமல் அமைந்திருக்கிறது அந்த கடை. மிகவும் சிறிய கடைதான். வேறு எந்த பதார்த்தங்களும் கிடையாது. டீ, பால் கூட கிடையாது. காஃபி மட்டும்தான். அதுவும் சாதாரண காஃபி அல்ல. ஆகச்சிறந்த காபி. ஆறு ரூபாய்க்கு ஒரு நாள் முழுதும் மலரவைக்கும் காஃபி.
எப்போதும் கூட்டம் நின்று கொண்டேயிருக்கிறது. முரளி என்பது அந்த கடை முதலாளியின் பெயர். கடைக்கு பெயர் கிடையாது. ஒரு சின்ன போர்ட் கூட கிடையாது. காஃபி 6 ரூபாயிலிருந்து 7 ரூபாயாக மாற்றப்பட்டிருப்பதாக ஒரு சிறிய கருங்கற்பலகை அறிவித்திருந்தது. அவ்வளவுதான். ஸ்ரீரங்கத்தின் முக்கியமான தலங்களுக்கு தரிசித்த கையோடு இங்கே தாராளமாக ஒரு ஸ்ட்ராங் காபி குடித்து பயணத்தினை நிறைவு செய்யலாம்.
காஃபி ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு இடம். முயன்று பாருங்கள்.
முரளி காஃபி கடை – புகைப்படம் நன்றி – அபிநந்தனன்


Leave a comment