Imtiaz Ali -1

வாழ்க்கையை ஒரு கோழி இறகினை விட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி, நொடிக்கு நொடி முடிவினை, மனதினை மாற்றிக்கொண்டேயிருக்கிற உயர்வகுப்புப் பையன் ஒருவன், ஒரு சிறிய அறைக்குள் இருந்துகொண்டு தனது பெரிய குடும்பத்தினை கட்டிக்காக்கிற ஒரு பஞ்சாபித்தாத்தா, தனது மகன் மனது முதிராமல் செய்துவிட்ட தவறுகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாது மன்னிக்கிற ஒரு தந்தை இப்படி இம்தியாஸ் அலியின் இரண்டு திரைப்படங்கள், அவரின் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எல்லாமே எனது மனதுக்கியைந்தன. 

இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு தயாரிப்பில் இருக்கின்றன. வெளிவந்த இரண்டுமே personally  அவருடைய master pieces  என்றுதான் சொல்லுவேன்.

சோச்சா நா தா  (2005)

  நினைத்தும் பார்க்கவில்லை என்று ராவாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அலைபாயுதே என்று தைரியமாக இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைத்திருந்திருக்கலாம். எல்லோருடைய கதையிலும், திரைக்கதையில்தான் ட்விஸ்ட் வைப்பார்கள் / இருக்கும். ஆனால் இந்த க்தையின் நாயகன் விரேனுக்கு (viren –abhay deol) மனதில் ஏற்படும் திருப்பங்களுக்கு அளவே இல்லை.

socha na tha
socha na tha

 

ஒரு பணக்கார குடும்பத்து இளைஞ்ன் விரேனுக்கு கிறுத்துவப்பெண் கரென்னுடன்(Karen – Apporva jha) காதல். அவளிடம் சொல்வதற்கு தயக்கம். விரேனின் குடும்பத்தினர் அவனை மற்றொரு பணக்கார அலையன்ஸாகிய அதிதியை (aditi – ayesha takia) மணக்க வற்புறுத்துகின்றனர். அதிதியுடனான பெண்பார்க்கும் படலத்தின்போடு தன் காதலைப்பற்றி விரேன் கூற தனக்கும் திருமணத்தில் நாட்டமில்லாததை அதிதியும் உரைக்க, விரேன் தனக்கு அதிதியை பிடிக்கவில்லை என்று கூறி இனிதே திருமணத்தினை நிறுத்தி விடுகிறான். இரண்டு குடும்பங்களுக்கிடையேயும் பகை. 

இதனிடையே விரேன், கரனிடம் தன் காதலை சொல்லி அவள் பச்சைக்கொடி காட்டுகிறாள். கரனின் குடும்பத்தாரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றனர். ஆனால் விரேனின் குடுமத்தாருக்கு ஒரு கத்தோலிக்க மருமகள் வேண்டாம் என்ற பிடிவாதம். 

இந்த குழப்பங்களுக்கிடையே அதிதியுடனான பல சந்திப்புகளை மேற்கொள்ளுகிறான் விரேன்.  இரண்டு பேருக்கும் இடையே நட்பு சுடர்விட்டு எரிகிறது. இருவரும் தங்களுக்கிடையே உள்ள அன்னியோன்னியம், தடைகளற்ற பேச்சு சுதந்திரம் போன்றவற்றை கொண்டாடுகிறார்கள். 

இப்பொழுது அடுத்த U  ட்ர்னாக விரேனின் குடும்பத்தினர் கரனுடான விரேனின் காதலை அங்கீகரிக்கிறார்கள். இப்பொழுதுதான் விரேனுக்கு தான் உண்மையில் காதலிப்பது கரனை அல்ல அதிதியை என்று உரைக்க, முதலில் அதிதியே தனது காதலை எதிர்க்கிறாள். 

அதனைத்தொடர்ந்து வரும் சிக்கல்கள், சண்டைகள் யாவற்றையும் கடந்து அதிதி விரேன் சேர்ந்தனரா என்பது climax. 

மேலோட்டமாக பார்த்தால் எந்த  ஸ்திரத்தன்மையும் இல்லாத கதாபாத்திரங்கள் மீது கடுமையான கோபமும் நிராகரிக்கிற உணர்வும்தான் மேலோங்கி இருக்கும். ஆனால் இதற்காக இம்தியாஸ் அலி உருவாக்கியிருக்கிற அழகான பல காட்சியமைப்புக்களுடன் கூடிய திரைக்கதை கண்டிப்பாக பாராட்டத்தக்கது. 

அபே தியோலுக்கு இது முதல் படம். ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆயிஷாவும்தான். 

ஒரு ப்டத்தின் சிறந்த பாடலை கிளைமாக்ஸ் முடிந்த பிறகு வைக்கிற தைரியம் எத்தனை டைரக்டர்களுக்கு வரும். படம் முடிந்து வருகிற சோனு நிகாம், சஞ்சீவினி பாடிய “யாரா ரப்பாடலை கேட்டுவிட்டு பிறகு திரையை அணைக்கவும்.

Leave a comment