RACE(2008)

பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.

 

 

விடாது திரையோடு இழுத்துப்பிடித்துக்கொள்ளும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் எப்போதாவதுதான் இந்தியாவில் வெளிவருகின்றன. வருடாவருடம் இந்த புண்ணியத்தை வாரிக்கட்டிக் கொள்கிறார்கள் அப்பாஸ்-மஸ்தான் சகோதரர்கள். சென்ற வருடம் naqaab என்னை எவ்வளவு ஈர்த்ததோ அதற்கும் சற்றும் குறையாமல், அதற்கு மேலும் எதிர்பார்ப்புகளுடன் சென்ற என்னை ஏமாற்றாமல் மிகச் சிறந்த திரைப்படமான வடித்திருக்கிறார்கள்  ”RACE” ஐ.

 

ரன்பீர் (saif ali khan) மற்றும் ராஜீவ் (akshaye khanna) சகோதரர்கள் டர்பனில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள். குதிரைப் பண்ணை வைத்திருக்கும்  கோடீஸ்வரர்கள். குதிரைப்பந்தய மைதானங்களில் சூதில் விளையாடி சொத்து சேர்க்கும் செல்வந்தர்கள். மூத்தவனான ரன்பீர் வியாபாரத்தில் of course சூதாட்டத்திலும் கவனம் குவித்து போட்டியாளர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்க, இளையவனான ராஜீவ் playboy  ஆகவும் குடிகாரனாகவும் உலாவுகிறான். தனது காதலை தியாகம் செய்து ரன்பீர் ராஜீவுக்கு சோனியாவை (பிபாஷா பாசு) திருமணம் செய்து வைக்கிறான். திருமணம் அவனை மாற்றும் என எண்ணுகிறான். ஆனால் அது பலனற்றுப்போகிறது. அவர்கள் உறவில் விரிசல் விழுவதில் தொடங்கி நடக்கத்துவங்குகின்றன சில (பல) துரோகங்களும், மரணங்களும் மற்றும் சில double-cross களும். தொடர்ந்து விழும் முடிச்சுக்களும் விடாமல் அவை அவிழும் லாவகங்களும் பார்வையாளனை வசீகரிக்கத் தவறுவதே இல்லை.

 

நேரம் செல்லச்செல்ல நடப்பது எதுவுமே காட்சிப்படுத்தப்பட்டது போல் அல்ல எனவும் எந்த கதாபாத்திரமுமே நம்பிக்கைக்குப்பாத்திரமானது அல்ல என்வும் நீங்கள் உணரத்துவங்குவீர்கள் பாருங்கள் அங்குதான் இந்த திரைக்கதையில் வலுவான முடிச்சு இருக்கிறது. அது உங்களை மிகவும் வேகமாக இருக்கையின் நுனிக்குத்தள்ளி உங்களை அங்கேயே உட்காரவும் வைக்கும்.

 

இடையில் மரணத்தை துப்பறிய வரும் RD (anil kapoor) ம் அவர் காரியதரிசி மினியும் நம்மை சற்றே எரிச்சல் படுத்தினாலும் அவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல என உணருவீர்கள். ரன்பீரின் காரியதரிசியாக வந்து அவனை ஒருதலையாக காதலிக்கும் சோனியாவும் (Katrina kaif) அப்படியே.

 

RACE ஒரே கணத்தில் அத்தனை ரகசியங்களையும் உங்கள் முன்னால் போட்டு உடைத்துவிடுவதில்லை. ரீலுக்கு ஒன்றாக ஒரு அவிழும் முடிச்சும் அடுத்த ரீலில் ஆரம்பிக்கும் அடுத்த முடிச்சும் ஒரு ரசிகனை மிகவும் ஆழ்ந்து வசீகரிக்கின்றன.

 

ஆகச்சிறந்த இந்திய திரில்லர் படங்களில் RACE   க்கு கண்டிப்பாக இடம் உண்டு.

 

தவறவிடாதீர்கள்.

 

Film          : RACE

Screenplay & Direction   : Abbas – Mustan

Music Director :    Pritam

Cinematographer :    Ravi Yadav
Story Writer          :    Shiraz Ahmed
Dialogue Writer :    Anurag Prapanna

Cast :    Anil Kapoor, Saif Ali Khan, Akshaye Khanna, Sameera Reddy, Katrina Kaif, Bipasha Basu

 

Leave a comment