கடந்த 5-6 மாதங்களாக வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பலவற்றை வேலைப்பளு, பயணங்கள் காரணமாக பார்க்க இயலாமற்போனது. பின்பு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
கரு.பழனியப்பனின் பெரும் பிரச்சனையே திரைக்கதையின் இரண்டாவது பாதியை புனையும்போது தூங்கப்போய் விடுவதுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அழகான கதைக்களம், சிறந்த கதை மாந்தர்கள். நல்ல கதை என்று எல்லாமும் நல்லபடியாக இருக்கும்போது ஏன் இரண்டாவது பாதியும், இறுதிக்காட்சியும் இத்தனை உதறு உதறுகின்றது என்று எனக்கு புரியவே இல்லை. பாதி விருந்தில் எழுப்பி விட்டது போல இருந்தது பிரிவோம் சந்திப்போம் பார்த்து வெளியில் வந்தபோது. I expect more than this kaanaa paana.!
இந்த கதாபாத்திரத்துக்கா நானாபடேகர் கால்ஷீட். கொஞ்சம் ஒவர்தான் லிங்குசாமி சார். கரு.பழனியின் எதிர்மறை இவர். இரண்டரை மணிநேரம் கழித்து வரப்போகும் நல்ல கிளைமாக்ஸ்க்காக எவ்வளவு கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியும். ரொம்பவே ஒவர். உடனடியாக இன்னொரு ரன் வேண்டும் லிங்கு சாருக்கும் எனக்கும்.
இவ்வளவு மொக்கையான திரைக்கதை கண்டிப்பாக செல்வராகவனுடையதாக இருக்காது என்று மட்டும் என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும். இதன் telugu original துபாயில் வெளியானபோது (டெலுகு திரைப்படங்களுக்கு வெள்ளிக்கிழமை காலைக்காட்சி மட்டும் இட ஒதுக்கீடு) பார்க்கமுடியவில்லையே என்று வருத்தப்பட்டது வீண் என்று தெளிவாக கூற முடிந்தது. வெற்றிகரமான 125 வது நாள் போஸ்டர் பார்த்தபோது கதறி அழ தோன்றியது. மொக்கைடி நீ மோகினி என்பதுதான் திருத்தப்பட்ட தலைப்பு.You too selva!
அறை எண் 305ல் அட்வைஸ் பரவாயில்லைதான். ஆனாலும் அதிகமாக எதிர்பார்த்தது என் தவறு. ‘பால் வீதி’ நகைச்சுவை ஆரம்பிக்கும்போது சந்தோஷமாக நிமிர்ந்து உட்கார்ர்ந்தேன் அவ்வளவுதான். பிறகு பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்கவில்லை நகைச்சுவை. Poor you simbu. Better luck next time.
சண்ட. இதைப்பற்றி பேசவே வேண்டாம். முற்றிலும் என்னுடைய தவறுதான். ஆனாலும் என்ன செய்ய! விதி வலியது. Dear mr.sunder.c, எனக்கு உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன் போன்ற (காப்பியாக இருந்தாலும்) classic காமெடி படங்கள் வேண்டும். ‘நாந்தான் உங்கப்பண்டா..நல்லமுத்து பேரண்டா’ என்ற RR உடன் நீங்கள் போடும் சண்ட சகிக்கவில்லை. Could you stop this please?
தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஹரர் படங்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. கடைசியாக தமிழில் வந்த சுமாரான ஹரர் படமாக “அது” வை சொல்லலாம். சிவி நன்றாக இருக்கிறது என்பது யார் கிளப்பிவிட்ட வதந்தியோ (Grrrrr Rediff) தெரியவில்லை. வெகு நாட்களாக டாரெண்ட்டிலெல்லாம் தேடிக்கொண்டிருந்தேன். வெகுசுமாராகக் கூட இல்லாதது பெரும்கொடுமை.
விஜய் தன்னுடைய இயக்குனர்கள் எல்லோரையும் பேரரசு அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்று துணிந்துவிட்ட பிறகு அந்த ஆண்டவனாலும் தரணியை காப்பாற்ற முடியாமல் போனது பெரும் கொடுமை. காட்சிக்கு காட்சி பேரரசு டெம்ப்ளேட் வேண்டும் என்று எடுத்துபோட்டு காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சியதை சும்மா சொல்லக்கூடாது. Worst film of the year!
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல கூத்தடித்தது திருவாளர்.வாசுதான். என்ன நினைத்துக்கொண்டு ‘கதபறயும்போள்’ script வாங்கினாரோ அவரால் முடிந்த அளவிற்கு கடித்துக்குதறித்தள்ளியிருக்கிறார் மனிதர். ‘எங்கே செல்லும் இந்த பாதை’ என்று இளையராஜாவின் குரல் பேக்டிராப்பாக ஒலித்துக்கொண்டே இருந்தது எனக்கு படம் ஆரம்பித்த நொடியிலிருந்து. என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இரண்டு டஜன் கதாபாத்திரங்கள் திரை நெடுகிலும் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். புதிது புதிதாக புடவை கட்டிக்கொண்டு மீனா வறுமை பேசுவதும், வறுமைக்கு பிறந்தவர் போல் உடலில் ஒட்டுத்துணியோடு வலம் வரும் நயன்தாராவும் நகைமுரண்கள். இன்னும் என்ன சொல்வது. 60 திர்காம்கள் + ஒரு நல்ல மதியத் தூக்கம் எனக்கும் ஒரு 50 நாள் கால்ஷீட் ரஜினி சாருக்கும் waste. (P.S. இந்த திரைப்படத்தை பார்த்த சீனிவாசனின் reaction என்னவென்பதை தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.) Dear Mr.Vasu pls continue with your mokkai but not with mr.rajni.
அவ்வளவுதான்!

Leave a comment