Month: June 2008
-
Welldone James!
ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர். முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது. திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது. “கண்கள் இரண்டால்” என்று…
