
விவரிக்கவே முடியாத வியப்புகளை முற்றிலுமாய் தன்னுள்ளே புதைத்துக்கொண்டிருக்கிறது ” mithya” என்கிற இந்த பெரிதும் அறியப்படாத பாலிவுட் திரைப்ப்டம். அதற்கு முன்பு பெயர் கூட அறிந்திராத இந்த திரைப்படத்தின் CD யினை எடுத்துக்கொண்டு போனபோது “
வினாயக் பதக் படம் போட்ட சிடி எந்தக் கருமமாயிருந்தாலும் வாங்கிட்டு வந்துற்றீங்களே…”என்று என் அறை நண்பர் பல்லைக்கடித்தார். நான் வினாயக் பதக்கின் ரசிகன். பேஜா பிரைக்கு பிறகு பரம..
(btw, நீங்கள் Bejah fry பார்த்துவிட்டீர்கள்தானே. இல்லையெனில் அவசியம் பாருங்கள்.) இந்த திரைப்படத்தில் வினாயக் பதக்கிற்கு சின்ன கதாபாத்திரம் கொடுத்ததை தவிர வேறு எந்த விதத்திலும்
ரஜத் கபூர் என்னை ஏமாற்றவில்லை.
வி.கே. என்கிற பாலிவுட்டில் பெயர் வாங்க துடித்துக்கொண்டிருக்கும் ஒரு துணை நடிகனதான் (
ரன்வீர் ஷோரே) கதாநாயகன். ஒரு வன்முறைக்கும்பல் தலைவனின் உருவ ஒற்றுமை இவனுடன் பொருந்திபோக அவனது வாழ்க்கை அடியோடு மாற்றமடைக்கிறது. அவ்வளவுதான். இதற்கு மேலும் சொல்ல ஒன்றுமில்லை. சொன்னால் சுவாரசியம் கெட்டுப்போகும்.
ஆனால் இந்த முடிச்சின் execution part தான் பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரு “(துயர) நகைச்சுவைப்படம்” என்று நாம் வேண்டுமானால் கேப்ஷன் கொடுத்துக்கொள்ளலாமே ஒழிய ரஜத் கபூர் இதனை சகல உணர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு த்ரில்லராகத்தான் இட்டுச் சென்றிருக்கிறார்
இதில் எந்த கதாபாத்திரமும் அதனை இயல்பை மீறி துருத்திக்கொண்டு தெரியவில்லை. எந்த காட்சியமைப்பும் வேறு alternative கிடையாது என்பது போலவே அவ்வளவு நிஜமாக இருக்கிறது திரைக்கதை. தொடர்ந்த ஆச்சர்யங்கள். திருப்பங்கள் என்று ஒரு சாதாரண பார்வையாளனுக்கான முக்கியமான specimen தான் இந்த படத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்று சொல்லுவேன்
நிச்சயமாக ரன்வீர் ஷோரே க்கு இந்த திரைப்படம் அவர் வெகு காலமாக காத்திருந்த விருந்தை அளித்திருக்கிறது. லூஸ் பாலுக்கு காத்திருந்த பேட்ஸ்மேனாய் சிலிர்ப்பான சிக்ஸர்களை அடித்துக்கொண்டேயிருக்கிறார் படம் நெடுக. மிக எளிமையான காட்சிகளிலும் சரி. கடுமையாக நடிக்க வேண்டிய காட்சிகளிலும் சரி. மிகச் சரியாக தனது ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். hats off!
நேஹா தூபியா விற்கு ‘வழக்கமான’ வேலைதான். கடினமில்லாமல் செய்துவிட்டுப்போகிறார்.. மிகவும் கடினமான ப்ளாட். கொஞ்சம் பிசகியிருந்தாலும் அடி பலமாக இருந்திருக்கும். ஆனால் வெற்றிகரமாக பயணத்திருக்கிறார் ரஜத். யாருக்காக படம் பார்த்து சிடி எடுத்தேனோ அவர் கதாபாத்திரத்தினை அடக்கியே வாசித்திருப்பது மட்டும்தான் கடுப்பை வரவழைத்தது. மற்றபடி ஒரு நல்ல- முக்கியமான படம்.
Leave a comment