Dreams & Questions

உங்கள் கனவுகளில் celebrities யாரேனும் வருவதுண்டா? எப்போதாவது அல்ல எப்போதுமே. எனக்கு இந்த syndrome இருக்கிறது கல்லூரி நாட்களிலிருந்தே. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறையேனும் நான் தமிழ்நாட்டு VIP களை கனவில் சந்தித்துவிடுகிறேன்.

ஆனால் எந்த விஷயமுமே இயல்பினை ஒத்தோ அல்லது அப்படியே அச்சு பிசகாமல் எதிர்காலத்தில் நிகழ்ந்ததோ இல்லவே இல்லை. அவைகளுக்கு அர்த்தமும் இல்லை. ஆனால் அல்ப சந்தோஷம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். ஆரம்ப நாட்களில் இதனைப்பற்றி நண்பர்களிடம்  கூறும்போது அவர்கள் சர்வ நிச்சயமாக நான் பொய் சொல்கிறேன் என்று நம்பினார்கள். பிறகு மெதுவாக யாரிடமும் இதனைப்பற்றி அளவளாவுவதனையும் விட்டுவிட்டேன். அம்மா மட்டுமே இதனை பெருமையாக எண்ணுவார்கள். தன் பிள்ளையின் intellectual பற்றிய over confidence அது. நிற்க.

இதில் லேட்டஸ்ட் , வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ட்ரைலரும்(spb சரண் தன் கையில் ஒரு பிஸ்டலுடன் வேகமாக ஒடுவது போன்ற காட்சி மட்டும் நினைவில் இருக்கிறது.), விகடனில் அந்த திரைப்ப்டத்திற்கு மூன்று பக்க விமர்சனமும் 45 மதிப்பெண்கள் போட்டிருப்பதாகவும் வந்த கனவு. ஆழ்மனது ஞாபகங்கள்தான் இதுபோன்ற கனவுகளின் அடிப்படை என்றால், எனக்கு இந்த திரைப்படம் பற்றிய சிந்தனை எதுவுமே இல்லை. இந்த திரைப்படம் பற்றிய செய்தியினையும்,அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களையும் சில வாரங்களுக்கு முன்பு படித்திருந்தேன். ஆனால் அது எனக்குள் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு சென்னை28 கூட பெரியதாக பிடித்துவிடவில்லை. என்னுடைய பெர்சனல் டாப் டென்னில் கூட பச்சைகிளி முத்துச்சரத்திற்கு ஒரு படி கீழேதான் ch-28 இருக்கிறது.

மேலும் என்னுடைய எதிர்பார்ப்பில் இருக்கும் வரும் மாதங்களில் திரையிடப்போகும் பட்டியலும் நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஏன் இதனைப்பற்றிய நினைவு கனவாக முளைத்து வர அவசியம் என்ன இருக்கிறது. ?இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்னும் படத்தை எடுத்தவங்களே ட்ரைய்லர் பார்க்காதபோது நாம பார்த்த் பெருமிதம் வேற ஒரு பக்கம் 

 confused with அல்ப சந்தோஷம்.!

Leave a comment