Month: January 2008
-
மூன்று விரல் – இரா.முருகன்
ஒரு நாவலை முழுமையாக ரசிக்க முடிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் content, சில எழுத்தாளர்களின் மொழிநடை, கதைகளில் களன், கதாநாயகர்களின் பிரமிக்கத்தக்க செய்கைகள் என இந்த பட்டியல் நீளும். இவற்றில் முக்கியமான ஒன்று நாவலில் நம்மையே நாம் பார்த்துக்கொள்ளும் தருணங்கள்தான். மூன்றுவிரல் நாவலில் அது சாத்தியமாயிற்று.
-
Dreams & Questions
உங்கள் கனவுகளில் celebrities யாரேனும் வருவதுண்டா? எப்போதாவது அல்ல எப்போதுமே. எனக்கு இந்த syndrome இருக்கிறது கல்லூரி நாட்களிலிருந்தே. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறையேனும் நான் தமிழ்நாட்டு VIP களை கனவில் சந்தித்துவிடுகிறேன்.
-
…Sung by JJ
1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்த “அம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.
-
Happy New Year
நேரமின்மையோ, வேலைகளின் அழுத்தங்களோ, மன உளைச்சல்களோ இன்னும் இன்னபிற தீவிர அன்றாட நாட்களின் அழுத்தங்களை கூட்டும் செய்கைகளோ என்னை தொடர்ந்து வலைப்பதிவு செய்யவிடாது குவிந்துவிடுகின்றன. அவ்வப்போது எழுதும் பதிவுகளும் பெரும்பாலும் சினிமா விமர்சனங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த வருடம் இதனிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கேனும் வலைப்பதிவு எழுத்துக்களில் நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. தொடர்ந்து தீவிரம் காட்ட எண்ணியிருக்கிறேன். எல்லாம் வல்ல இறை துணை செய்ய வேண்டும் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!
