கடைசியாக நான் பார்த்த மிகச்சிறந்த திரில்லர் திரைப்படம் ஒரு இரட்டை இயக்குனர்களின் படம்தான். ஜேடி–ஜெர்ரி யின் விசில் அது. அதன் பிறகு வந்த எந்த ஒரு இந்திய திரில்லர் படமும் என்னை ஈர்க்கவில்லை. மீண்டும் இன்னொரு இரட்டை இயக்குனர் – அப்பாஸ்-மஸ்தான் வாயிலாக அது நிறைவேறியது சென்ற வார இறுதியில்.
திரில்லர் திரைப்பங்களின் இலக்கணங்களாக நான் கருதுவது திரைப்படத்தின் எல்லா கதாபாத்திரங்களையும் முதலிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் கடைசியாக ஒரு புதிய கதாபாத்திரத்தினை புகுத்தக்கூடாது – படம் நெடுக ஆச்சர்யம் தரும் திருப்பங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் இதற்கும் மேலாக எதிர்பாராத, வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் Naqaab ல் முழுமையாக கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன.Naqaab ன் சிறப்பே மிக சிறப்பாக எழுதப்பட்ட script ம் அதனை செயல்படுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த Narration Technique ம் தான். மூன்றே மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்தான். அவர்களை சுற்றித்தான் கதை செல்ல வேண்டும் என்று முடிவு செய்த பிறகு காட்சிகளை எவ்வளவு சுவாரசியப்படுத்த முடியுமோ அவ்வளவு சுவாரசியப்ப்டுத்துகிறார்கள்.
முக்கியமான சினிமா என்று சொல்ல முடியாவிட்டாலும், சுவாரசியமான திரைப்படம்தான். Caption கூட பாதி உண்மைதான். “Thriller of the year”.
Naqaab : ஹிந்தி
நடிகர்கள் : அக்ஷய் கன்னா, பாபி தியோல், ஊர்வசி ஷர்மா
இசை : பிரீத்தம்
இயக்கம் – அப்பாஸ் முல்தான்.


Leave a comment