அறைஎண்305 & வெள்ளித்திரை

தமிழ் சினிமாவின் காமெடி genre ஐ சமீபகாலத்தில் மிகவும் ஆரோக்கியமான, வித்தியாசமான பாதையில் திருப்பிய பெருமை இரண்டு இளைஞர்களை சாரும் என எண்ணுகிறேன். இந்த இரண்டு இளைஞர்களும் அறிமுகப்படுத்திய நகைச்சுவை கருத்துசொல்லாதது, கோணங்கிகளை முன் நிறுத்தாதது மற்றும் உடல் ஊனங்களையோ அல்லது தன்னினும் மெல்லினத்தோரை துன்புறுத்துவதை காட்டாதது மற்றும் இன்னபிற…

ஒருவர் விஜி. அழகியதீயே,பொன்னியின்செல்வன்,மொழி திரைப்படங்களின் வசனகர்த்தா. அழகிய தீயே படம் வந்தபோது படத்தின் பிரமாதமான வெளிப்பாட்டுக்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தது இவரின் நகைச்சுவை வசனங்களும்தான். முதல் படத்திலேயே பெரிய பலே போட வைத்தவர். சமீபத்தில் வெளியான மொழியும் ஒரு அற்புதமான வசனகர்த்தாவின் இருப்பை நமக்கு தெரியப்படுத்தியது .அவர் தற்போது டூயட் மூவிஸ்க்காக வெள்ளித்திரை என்ற புதிய படத்தினை இயக்குகிறார். இதுஉதயானனு தாரம்என்ற பிரபல மலையாள திரைப்படத்தின் தமிழ் வடிவம் என்று கருதப்படுகிறது. ஒரு வசனகர்த்தாவாக வெற்றி பெற்ற விஜி நிச்சயம் இயக்குனராகவும் வெற்றி பெருவார் என்று நம்புவோம்

மற்றொருவர் வரலாற்றுத்திரைப்படங்களிலும் மிக மிக லாவகமாக, புத்திசாலித்தனமாக நகைச்சுவையை பொருத்தியிருந்தார். தனது முதல் படத்திலேயே நகைச்சுவை முத்திரையை அழுத்தமாக பதித்தவர். சிம்புதேவன். இப்போதும் ஒரு fantasy கதையை அறை எண் 305ல் கடவுள் என்கிற தலைப்பில் இயக்கி வருகிறார்மிகவும் நளினமான, வித்தியாசமான,ஆரோக்கியமான நகைச்சுவை திரைப்படங்களை அளிக்க வரும் இந்த இரண்டு இளைஞர்களையும் வாழ்த்துவோம்.

4 responses to “அறைஎண்305 & வெள்ளித்திரை”

  1. நிச்சயம் வாழ்த்துவோம்! வாழ்த்துகிறேன்.

  2. நன்றி வெயிலான் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

  3. போஸ்டர் நல்லாருக்கு

  4. வாங்க பாலா சார்.தினத்தந்தி உபயம் 🙂

Leave a comment