இசைமுத்துக்கள் மூன்று

1. Tera Mera Milna

திரைப்படம் :  ஆப் கா சுரூர் (Aap ka suroor)

இசை : ஹிமேஷ் ரேஷமிய்யா 

குரல்கள் : ஹிமேஷ் ரேஷமிய்யா ,ஷ்ரேயா

 அட ஹிமேஷ் ரேஷமிய்யா குரலிலும்  ஒரு அருமையான மெலோடி -அதுவும் ஷ்ரேயா கோஷல் மெலடி பாடுகிறார் என்றால் கேட்கவா வேண்டும். சர்க்கரை பந்தலில் தேன்மாரி. hats off ஷ்ரேயா கோஷல்   . 

தான் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் பார்த்து பார்த்து பாடல்கள் போட்டிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. கேளுங்கள் இங்கே

2. கையெத்தா கொம்பத்து கண்ணெத்தெணும்.. 

திரைப்படம் :  வினோதயாத்ரா

இசை : இளையராஜா

குரல் :  யேசுதாஸ் , மஞ்சரி

சத்யன் அந்திக்காட் திரைப்ப்டமென்றால் இளையராஜா ஒவர்டைம் செய்ய ஆரம்பித்து விடுவார். இப்படி முத்து முத்தாக அனைத்து பாடல்களையும் எந்த தமிழ் திரைப்படத்திற்கும் சமீப காலத்தில் வழங்கவில்லை என்றே நினைக்கிறேன். அதிலும் கையெத்தா வின் இரண்டு சோலோ வெர்ஷன் களுமே பலே! 

கண்ணை மூடிக்கொண்டு மலை உச்சியில் மூலிகைக்காற்று தழுவ நின்ற அனுபவம் எனக்கு. கேளுங்கள் யேசுதாஸ் குரலில் இங்கே, மஞ்சரி குரலில் இங்கே.

3. பேசுகிறேன்..பேசுகிறேன்

திரைப்படம் : சத்தம் போடாதே

இசை : யுவன் ஷங்கர் ராஜா

மிக மிக அருமையான பாடல்.  விவா கேர்ள்ஸ் குரலில் மிக இனிமையான அனுபவம். வரிகளும், வார்த்தைகளும், இசைகோர்ப்பும் அலாதியான ஆனந்தம் தருவன. இடையில் வரும் saxaphone ட்ராக் மிக மிக அருமை. நான்  முன்னொரு பதிவில் குறிப்பிட்டதைப்போலவே முனைவர் முத்துக்குமாரின் வரிகள் இந்த பாடலுக்கு மிகப்பெரியதொரு வலு. கேளுங்கள் இங்கே.

4 responses to “இசைமுத்துக்கள் மூன்று”

  1. இந்த பதிவை படிக்கும்போது ஹிமேஷ் ரேஷமிய்யாவின் AITRAAAZ கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு மிக பிடிக்கும். நல்ல இசையமைப்பு.
    ஷங்கர்/இஷான்/லாய் கூட்டணியின் PHIR MILENGE, KAL HO NAA HO, LAKSHYA பாடல்களும் AITRAAAZ, Swadesh, Main hoo naa வும் தினமுமே தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருப்பேன். (அர்த்தம் துளிகூட தெரியாது)

    சத்தம் போடதே – யுவன் நன்றாக செய்துள்ளார்.
    -விபின்

  2. வருகைக்கு நன்றி விபின். எனக்கு ஹிமேஷின் இசை பிடித்துதான் இருக்கிறது. ஆனால் அவர் பாடுவதை நான் அறவே விரும்புவதில்லை. அவரின் குரல் எல்லாவித பாடல்களுக்கும் எடுபடுவதில்லை என்பதால்.

    தமிழ்நாட்டவர் அனைவருமே ஒன்றுபட்டிருக்கும் விஷயங்களில் ஒன்று ஹிந்தி முழுமையாக அறியாமையும்….சரிதானே 🙂

  3. //தமிழ்நாட்டவர் அனைவருமே ஒன்றுபட்டிருக்கும் விஷயங்களில் ஒன்று ஹிந்தி முழுமையாக அறியாமையும்….சரிதானே//
    சற்றே வருத்தமான உண்மைதான். தமிழகத்தை விட்டு வெளியே செல்பவர்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கும். ஆனால் நான் இந்தி பாடல் கேட்பது வித்தியாசமான காரணத்தால். அர்த்தம் புரிந்தால் கற்பனையும், மனமும் அதன் பின்னே சென்றுவிடும். வேலை கெட்டு விடும். அதனால் அர்த்தம் புரியாத, நல்ல இசைக்காக இந்தி பாடல்.
    ஆனால் இப்போது அடிக்கடி கேட்பதால் சில பாடல்களுக்காவது அர்த்தம் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது. நல்ல இசையுடன் இருக்கும் வேற்றுமொழி பாடல்களையும் கேட்பேன்.

  4. உங்களின் விளக்கம் அருமை. மேலும் ஹிந்தி பாடல்களும்,திரைப்படங்களும் நிச்சயமாக ஒரளவுக்கேனும் மொழியை புரிந்துகொள்ள பேச உதவும்.

    தங்களது இசை ஆர்வத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

Leave a comment