முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.

இந்த இரண்டு தொகுப்புகளிலேயே, தாலாட்டு, மோக வெளிப்பாடு, காதல்–காம வித்தியாசங்களை வெளிப்படுத்துதல், positive attitude, பெண்ணின் தனியான காதல் பாடல், அப்பா,மகன் இடையே உறவை வெளிப்படுத்தும் பாடல் சாதாரண ஹீரோ அறிமுகப்பாடல், டூயட் என எல்லா பாடல்களிலும், இசையமைப்பாளரின் இசை கோர்ப்புகளை விடவும், வரிகள் மிக அழகாக வெளிப்பட்டு தெரிகின்றன. பலே கவிஞரே!
பின்குறிப்பு: கவிஞருக்கு ஒரே ஒரு கனிவான வேண்டுகோள். உங்களின் சிரித்த முகத்தோடு கூடிய படம் வேண்டுமென்று ரொம்ப மெனக்கெட்டுவிட்டேன். திருமண ஆல்பம் வரை போய் தேடி பார்த்துவிட்டுவந்துவிட்டேன். மிகவும் அளவாகவே சிரிக்கிறீர்கள் போலும்! புகைப்படங்களில் இனி உங்களின் சிரிக்கும் முகம் பார்க்கும் வாய்ப்பினை உங்கள் ரசிகர்களுக்கு கொடுங்கள். pls.

Leave a comment