Bakwas barabar Bakwas

* சிவாஜி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகாது என்ற செய்தி கிடைத்ததும், jhoom barabar jhoom பார்க்கலாமே என்று தொலைபேசியபோது மாலையும் இரவுமாக 6 காட்சிகளும் Full என்றார்கள்.”

 

 

* Grandcinemas முதலில் சிவாஜியை ரிலீஸ் செய்வதாக இருந்ததாகவும் பின்னர் JBJ அதே வாரத்தில் வெளியாவதால் அதற்கு கூட்டம் நிறைய இருக்கும் என்பதாலும் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் Grand வட்டாரங்கள் தெரிவித்தன.

 

* வெள்ளிக்கிழமை மதியம் சிவாஜி ஜுரத்தில் தியேட்டரில் நின்று கொண்டிருந்தபோது முதல் காட்சி விட்டு வந்த anti ரஜினி ரசிகர் சொன்னதுஇங்க வந்ததுக்கு இன்னொரு தடவ JBJ பார்த்துருக்கலாம்

 

* சிவாஜியைப்பற்றி புளகாங்கிதங்களோடு பேசிக்கொண்டிருந்த வேளையில் வட மாநில நண்பர் ஒருவர் சொன்னது , “நான் ஒரு JBJ பார்த்தா 100 தடவை சிவாஜி பார்த்த மாதிரி“.

 

ஏதுடா இவ்வளவு சொல்றாங்களேன்னு படத்துக்கு போனா…………

 

ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லை.யாஷ் சோப்ராகிட்ட நிறைய பணம் இருந்தா கமல் கைல கொடுத்து ஒரு மருதநாயகமோ இல்லை ஷங்கர்கிட்ட கொடுத்து இன்னொரு முதல்வன், சிவாஜி மாதிரியோ அட அதுவும் வேணாம்னா, அமீர்கான் கூட்டணியை கூப்பிட்டு லகான் மாதிரி படமோ பண்ண வேண்டியதுதானே!

 

நம்மளை இப்படியா சோதிக்கணும்?

 

ரெண்டு பேர் பார்த்தவுடனே லவ்வுன்னா சும்மா சொல்லிட்டு டூயட் பாடிட்டு போக வேண்டியதுதானப்பா சும்மா டயானா, சூப்பர்மேனெல்லாம் வம்புக்கு இழுத்து, பாவம் வயித்து வலின்னு ஆபரேஷன் பண்ணின அந்த வயசானவர் கையில ரெண்டு கிதாரை கொடுத்து ஆடுன்னு சொல்லி, பாடா படுத்தி, இந்த மொக்கை கதைக்கு இங்கிலாந்து வரைக்கும் போய் அங்கனயும் ரயில்வே ஸ்டேஷன்ல ஒக்கார வச்சு கதை சொல்லி…………………………………………….கடைசியில ஒண்ணும் ஒப்பேறல.இன்னொரு தடவை யாஷ்சோப்ரா படம்னா முதல் நாளே போவியா, போவியான்னு கண்ணாடி முன்னாடி நின்னு திட்டிக்கிட்டதுதான் மிச்சம்.

 

Pure Bakwas!

 

 

Leave a comment