CCC

Countdown of Curiously expecting Coming ups!

 

வரும் நாட்களில் நான் ஆவலோடு காண எதிர்பார்த்திருக்கும் திரைப்படங்களின் தலைகீழ் வரிசை.

 

 

5. சத்தம் போடாதே : வஸந்த் என்ற ஒரு இயக்குனரை மறந்து விட்டோமோ என்ற பயத்திலோ என்னவோ இந்த திரைப்படத்தின் ட்ரைலரில் அவரின் எல்லா திரைப்படங்களின் கிளிப்பிங்களை காட்டுகிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாய் இவரின் திரைப்படம் வரவில்லையே என்று காத்திருக்கும் என் போன்ற ரசிகர்களுக்காவது சீக்கிரம் ரிலீஸ் செய்யக்கடவது!

 

மிகவும் எதிர்பார்த்திருக்க காரணம் : வஸந்த், வஸந்த் மற்றும் வஸந்த் தவிர வேறு எதுவுமில்லை.

 

4.கண்ணாமூச்சி ஏனடா : இந்த திரைப்பட இயக்குனரின் முதல் திரைப்படத்தினை almost தினமும் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன் சென்ற வருடங்களின் ஆரம்ப மாதங்களில். மிக நுண்ணிய அழகியலுடன் வடிவமைத்திருந்த அந்த திரைப்படத்தின் ஒன்றுதலிலிருந்து நான் இன்னும் மீளவில்லை என்பதுதான் உண்மை. அவர்ப்ரியா.V. அந்த திரைப்படம்கண்ட நாள் முதல். ஒரு பெரிய இடைவேளைக்குப்பிறகு மீண்டும் அவரது அடுத்த படத்திற்கா அறிவிப்பு வந்திருக்கிறது. ராடான் தயாரிப்பில் பிரித்விராஜ்,சந்தியா,சத்யராஜ்(!), ராதிகா நடிப்பில் அநேகமாக family entertainer ஆக இருக்கலாம்.

 

மிகவும் எதிர்பார்த்திருக்க காரணம் : ப்ரியா.V.

 

3.பீமா: சற்றும் எதிர்பாராத வண்ணம் இருந்தன லிங்குசாமியின் திரைப்பட moves. முதலில் ஒரு குடும்ப திரைப்படம். அடுத்ததாக இளமை துள்ளலுடன் ஆக்ஷன் கலந்த ரன். பிறகு அரசியல் படம். அந்த flop ற்கு பிறகு பிரபலமாகாமல் இருந்த விஷாலை ஏணிப்படிகளில் தூக்கி வைத்த சண்டைக்கோழி என வித்தியாசமாக தனது சப்ஜெக்டுகளை வடிவமைத்துக் கொண்டே இருப்பவர். தற்போது நீ……….ண்ட நாள் ப்ரொட்க்ஷனில் இருக்கும் பீமா இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என நம்பலாம். மஜா என்று திரைப்படம் வந்தது. “தொம்மனும் மக்களும்ரீமேக் என்று சொன்னார்கள். இப்படி சொதப்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. அவ்வளவு பெரிய நடிகருக்காகவாவது திரைப்படத்தில் கொஞ்ச நஞ்சம் ஏதாவது சரக்கு சேர்த்திருக்கலாம். நிச்சயமாய் விக்ரம் கூட முதல் பிரதியை ரசித்திருக்க மாட்டார். ஒருவேளை அதற்காகத்தானோ என்னவோ இவ்வளவு நாட்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார் அடுத்த படத்திற்கு?

 

மிகவும் எதிர்பார்த்திருக்க காரணம் : லிங்குசாமி மற்றும் விக்ரம்.

 

2. தசாவதாரம்: கெளதம் மேனன்+கமல் combination பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு திரைப்படம் நன்றாக இருந்தாலும் அவர்களின் திறமைகளின் கூட்டை மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது ஒரு சிறிய ஏமாற்றமாகத்தான் இருந்தது. அந்த பெரிய எதிர்பார்ப்பு இல்லாததாலும் KSR திரைப்படம் என்றால் அது almost கமல் திரைப்படம்தான் என்பதாலும் நிச்சயம் ஒரு சிறந்த entertainment இருக்குமென்பதாலும் ஆகஸ்ட் 15 வரையில் பொறுமையாக காத்திருப்போம்.

 

மிகவும் எதிர்பார்த்திருக்க காரணம் : கமல் , 10 கதாபாத்திரங்களையும் withstand செய்திருக்கப்போகும் திரைக்கதை.

 

1. சிவாஜி : கண்டிப்பாக பாபா திரைப்படத்தின்போது இருந்ததைவிட இரண்டு மடங்காக இருக்கும் எதிர்பார்ப்பு, மீடியா ஹைப், என எல்லாமும் இப்போதும் உண்டு கூடவே பாபா போல ஆகிவிடக்கூடாதே என்ற தவிப்பும். ஆனால் ஷங்கர் இயக்குனர் என்பதால் எதுவும் இல்லாததையே சிறப்பாக கொடுத்தவர் ஒரு இமயத்தை வைத்துக்கொண்டா கோட்டை விட்டுவிடுவார் என்ற நிறை மனதுடன் எதிர்பார்த்திருப்போம்… just 14 days to go! மிகவும் எதிர்பார்த்திருக்க காரணம் : ஷங்கர்,ரஜினி மற்றும் ரஜினிஷங்கர்

 

 

2 responses to “CCC”

  1. […] பார்க்க நினைக்கும் ஐந்து படங்களைப் பட்டியலிடுகிறார் சிவராமன்… 5. சத்தம் போடாதே : வஸந்த் […]

  2. மிகவும் நன்றி பிரகாஷ். வருகைக்கும், இணைப்புக்கும்.

Leave a comment