1. எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி திரைப்படம் பார்க்கச் சென்றது அல்லது இருந்த எல்லா பெரிய எதிர்பார்ப்புகளும் விமர்சனங்கள் படித்து நீர்த்துப்போனபோது வேறு வழியில்லாமல் பொழுது போகாத ஒரு நாளில் சினிமா பார்க்கச் சென்றதாலும்…
2. படம் நெடுகிலும் பளிச்சென விரியும், எங்கும் பிசிறு தட்டாத frame கள். ஒரு அழகிய அனுபவம். hats off jeeva!
3. கதாநாயகிகள் :
அ) சதா இவரை கதாநாயகியாகப்போட்டு தமிழ்கூறும் நல்லுலகை நோகடித்துக்கொண்டிருந்தாலும் close-up shot ல் ஒரு அழகான சிரிப்பு சிரித்தே தனது graph ஐ மெல்ல ஏற்றிக்கொண்டிருந்த சதாவை screen நெடுக முறைத்துக்கொண்டே அலையவிட்டிருப்பது.
ஆ) neilnnikky ல் பார்த்த பெண்ணா அது? சின்மயியி பின்னணிக்குரலோடு சேர்த்து 50 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிவிடும் போலிருக்கிறதே!
4. படத்தின் முதல் பாதி முழுக்க நிரம்பி வழியும் ஜாலியான திரைக்கதை.
5. பாடல்களும் பாடல்களை படமாக்கிய விதமும். பலே! வைகாசி நிலவே பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த நீலமும்,பச்சையும் (அல்லது ராமர் பச்சை) கலந்த வண்ணத்தில் வரும் color grading ற்காகவே இன்னொரு முறை பெரிய திரையில் பார்க்கலாம். super. [ மற்றபடி ஹாரிஸ் இசையென்றால் BGM பற்றி மூச்சு கூட விட முடிவதில்லை. என்னத்த சொல்றது.?]
6. ஏற்கனவே கேட்ட நகைச்சுவை துணுக்குகள்தான் என்றாலும் presentation is very good.
7. இரண்டாவது பாதியில் தடுமாறும் திரைக்கதை கூட அந்த கதாபாத்திரங்களின் decision making problems என்று வாதிட வைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பெற்றிருப்பது ( It converted a big problem into an opportunity towards climax!)
8. மிக நல்ல கிளைமாக்ஸ் (எனக்கு பிடிச்சிருக்குப்பா!)
9.சில நேரங்களில் மிகவும் நீளாமானவை என்றாலும் கூட பொருத்தமான வசனங்கள்.
10. இறுதியாக “கண்ட நாள் முதல்” க்கு பிறகு 1 வருடத்திற்கும் மேலாக மில்ஸ் அண்ட் பூன் வடிவில் ஒரு படம் வரவில்லையே என்ற ஏக்கத்திற்கு வடிகாலாக அமைந்ததற்காகவும்…!
Hats off Jeeva and the team!

Leave a comment