மாறன் பிரதர்ஸ் vs மு.க.பிரதர்ஸ் – சில கேள்விகளும் சில யூகங்களும்

கேள்விகள்

 

1. மத்திய அரசிலும், தி.மு.. சார்பில் டெல்லியிலும் குறைந்த நாளில் மிக அதிக பெருமை ஈட்டிய தயாந்தி மாறன் திடீரென்று மாநில அளவில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு கருத்துக்கணிப்பை ஏன் நடத்த வேண்டும்.?

 

2. ஸ்டாலின் தான் பிரதான வாரிசு என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவாகத் தெரிந்திருக்கையில் எதற்காக இந்த சிறிய கருத்துக்கணிப்புக்கு அழகிரி இவ்வளவு கடுங்கோபம் கொள்ள வேண்டும்.

 

 

3. என்னதான் கடின உழைப்பால் மேலே வந்திருந்தாலும், தி.மு..வினால் பெற்ற சலுகைகளை மறந்து ஏன் கலாநிதி மாறன் இப்படிப்பட்ட சர்ச்சையை கலைஞர் தடுத்தும் மேற்கொள்ள வேண்டும்.?

 

4. எல்லா தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் மதுரை மேயரும், அவரது ஆட்களும் செய்யும் அராஜகங்களை பிரசுரித்து / ஒளிபரப்பிய பின்னரும்அவர்கள் தெள்ள்த்தெளிவாக அழகிரியிம் தூண்டுதலால்தான் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் அவர்கள் மீதான நடவடிக்கையினை மறந்துவிட்டு தயாநிதியையும், கலாநிதியையும் மட்டுமே கருத்தில் கொண்டு எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது எதற்காக?

 

5.தன்னை அரசியலில் நுழைத்து அகர முதலி கற்பித்து வானளாவ உயர்த்திட்ட கலைஞரின் பொன்விழாவை புறக்கணிக்கும் அளவுக்கு தயாநிதிக்கு என்ன வருத்தம் / கோபம்.?

 

 

6. திருவாளர்கள் மருத்துவர் ஐயா ராமதாசு, திருமாவளவர், .வி.கே.எஸ். இளங்கோவர் போன்ற கூட்டணியில் இருந்தாலும் சமுதாய / மக்கள் நலன் பேணுகின்ற சமத்துவர்கள் ஏன் இந்த சம்பவத்தின் அடிநாதமான கலைஞரின் பிள்ளைப்பாசத்தினை பற்றி பேசக்கூட இல்லை?

 

7.அழகிரிதான் வன்முறைக்கு அடிப்படை காரணம் என்று தெரிந்த பின்னரும், அவருக்கு விமான நிலையத்திலிருந்து வீடு வரை போலீஸ் மரியாதையுடன் அணிவகுப்பு அளித்தது எந்த விதத்தில் நியாயம்.?

 

8. கடந்த சில நாட்களாக வன்முறையைப் பற்றிய செய்திகளை மறந்து / மூன்று உயிர்களைக்குடித்த அந்த கோர சம்பவத்தை மறந்து / தயாநிதிக்கும் / கலாநிதிக்கும் சன் டி.வி.க்கும் என்ன நிலை வருமோ என்று ஏன் எல்லா ஊடகங்களும் கவலைப்படுகின்றன?

 

9.இவை எல்லாமே கனிமொழியின் அரசியல் வரவிற்காக மு..பிரதர்ஸ் நடத்தும் நாடகங்களா? அப்படியெனில் எதிர்காலத்தில் கனிமொழி தயாநிதி போன்றே தனக்கு பின்னால் ஒரு intellectual பிம்பத்தோடு கூட்டம் சேர்த்தால் இதே கோபம் அவர் மீதும் திரும்புமா?

 

 

10. சட்டம், ஒழுங்கு என்று சொல்லப்படுவதெல்லாம் அவர்கள் மற்றும் இவர்களின் குடும்பங்களுக்கு கிடையவே கிடையாதா?

 

யூகங்கள்

 

1. ஒரு வேளை In the near future, நடந்த எல்லாவற்றையும் மறந்து மாறன் மற்றும் கலைஞர் குடும்பங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து அவர்களின் குடும்ப புகைப்படம் தினகரன் முதல் பக்கத்தில் வெளியாகும்போது இப்போது பெரும் பதற்றத்துடன் நிகழ்ந்தவைகளை பார்த்துக்கொண்டிருக்கும் நம் நிலை என்ன?

 

2. ஒரு வேளை தயாநிதி அரசியல் எதிர்காலத்திற்காக அ...தி.மு..வில் இணைந்து விட்டால் சன் டி.வி.இனிமேல் அம்மாவின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யுமா?

Leave a comment