நீங்கள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிப்பவரா? உங்களுக்கு தொலைக்காட்சியை விட வானொலி மீது அதிக பிரியம் இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குதான். தினமும் இரவு 10 மணிக்கு 96.7 என்ற மலையாள பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும் “கிராமபோன்” என்ற மிக அழகியல் கலந்த நிகழ்வை தவறவிடாதீர்கள். மொழி புரியவில்லை என்ற தயக்கம் ஏதும் இல்லாமல் மற்ற பண்பலைகளில் வரும்காட்டுக்கத்தல்கள் இல்லாமல், அழகிய கோர்வையுடன், மிக நளினமான குரல் வளமுள்ள, வசீகரமான வர்ணனையுடன் பேசும் வர்ணனையாளர் ( hats off ஷாலு Faisal), தேர்ந்தெடுத்த மென்குரல் பாடல்கள், நல்லிரவில் மயிலிறகால் இமைகளை வருடும் இசை என மிக அருமையான நிகழ்ச்சி. அவசியம் கேளுங்கள்.பலே 96.7 & ஷாலு Faisal!

Leave a comment