Month: April 2007
-
நான் அவன் இல்லை
கொஞ்சமும் நடிப்பு திறமையின்றி, முகவெட்டும் இன்றி, நடனம் ஆடவும் தெரியாத ஒரு நடிகருக்கு தொடர்ந்து எப்படி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன அதுவும் அத்திரைப்படங்கள் சுமாரான வெற்றியும் பெறுகின்றன என்ற million dollor questionkku யாரிடமும் விடையில்லை. முதலில் இப்படி ஒரு subject கே.பாலசந்தர் எடுத்திருக்கிறார் என்பதே மிக மிக ஆச்சர்யமான செய்தியாக இருந்தது. நான் அந்த பழைய திரைப்படத்தை பார்க்காததால் எவ்வித்மான treatment கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய பெண் தொழிலதிபர், ஒரு…
-
A million dollor salutes.
1. சிறந்த கூட்டு முயற்சி 2. சிறந்த கேப்டன் (சில நேரங்களின் அதிகம் பேசினாலும்..!) 3. நிலைமை / பொறுப்பு உணர்ந்து விளையாடும் சிறந்த வீரர்கள ்4. தலைசிறந்த தன்னம்பிக்கை 5. மிக சிறந்த விடாமுயற்சி இன்னும் ஆயிரம் சிறப்புகள் நிறைந்த ஆஸி கிரிக்கெட் அணிக்கு a million dollor salutes. Congratulations!
-
நில்லுங்கள் ராஜாவே – sujatha
ஒரு சாதாரணன் தன் உடைமைகளும், சொந்தங்களும், பந்தங்களும் மற்ற யாவரும் தன்னை ஒரு முற்றிலும் அன்னியனாக பாவிப்பதாகவும், இந்த பெரும் குழப்பம் தரும் நிகழ்வுகளினூடே ஒரே ஒரு புதிய முகம் மட்டும் தன்னை “நில்லுங்கள் ராஜாவே” என அழைப்பதாகவும் உரைக்க அவனை விசாரணைக்குட்படுத்தி கணேஷ், வசந்த் ஒரு பெரிய நாட்டின் அதிபரை காப்பாற்றுவது வரை செல்லும் அருமையான thriller நாவல். ஆரம்பத்தின் psycological thriller போன்று ஆரம்பித்து பிறகு புரியாத medical terms பலவற்றை…
-
குன்னக்குடி + சுத்த தன்யாசி = bliss
வாரத்தின் முதல் நாள். வார விடுமுறையின் தூக்கம் கெடாத காலைப்பொழுது – நல்ல குளியல் போடலாமென்று நினனத்திருக்கும் வேளையில் கடும் வெய்யிலில் காய்ந்து நெருப்பாய் கொட்டும் குளியலறை ஷவர் – சுட சுட கொண்டு வைக்கப்பட்ட காலை உணவு – திடீரென்று நின்று போய்விட்ட அலுவ்லக பேருந்தின் a/c . அந்த புழுக்கத்திலும் அலறும் ஹிமேஷ் ரேஷமிய்யாவின் குரல். இவ்வளவு கொடுமைகளையும் ஈடு கட்டும் அருமருந்தாய் அமைந்தது இந்த அருமையான கீர்த்தனை. ஆஹா!…
-
தீபாவளி
கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதைகள் நிச்சயமாய் தோற்றுப்போகும் என்ற எனது நீண்ட நாள் அபிப்ராயம் சற்றே மாறித்தான் போயிருக்கிறது நேற்று தீபாவளி திரைப்படம் பார்த்த பிறகு. நான் ரசிக்கும் ஒரு சிறந்த இயக்குனர் producer, நான் இன்றளவும் மிகவும் விரும்பும் ஒரு திரைப்படத்தின் director தான் இத்த்ரைப்படத்தின் இயக்குனர், சிறந்த இசை இவை எல்லாம் இருந்திருந்தும் நான் இந்த திரைப்படத்திற்குபோகாததற்கு காரணம், திரைப்படத்தின் oneliner -ஐ விமர்சனங்கள் மூலமாக அறிந்திருந்ததுதான். 50FirstDates என்ற ஆங்கிலப்படத்தின்…
-
Mr.Bean’s Holiday
மிகுந்த மன அழுத்தமும், குழப்பமும், அயர்ச்சியும் சூழும் தருணங்களில் , ஒரே ஒரு செய்கை மொத்த காலநிலையையும் மாற்றும் அதிசயங்கள் நிக்ழ்வதுண்டு. அது போன்றே அன்றைய கவலைகளை மறக்க செய்தது வார விடுமுறையில் பார்த்த Mr.Bean’s holiday திரைப்படமும். பாருங்கள்…உங்கள் உள்ளத்திலுள்ள குழந்தைமையை உணருங்கள்.
-
மாயக்கண்ணாடி
இசை விமர்சனம் சேரனின் திரைப்படங்களில் பாடல்களில் கவித்துவம் இருப்பதை விட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மிக ஆர்வமாக வலியுறுத்துபவர். புதிய கவிஞர்களையும்ஊக்குவிப்பவர். பா.விஜய் (கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு) சினேகன் (தோழா,தோழா) முதலியோர் சேரன் திரைப்படங்களில் எழுதிய பிறகுதான் தமிழ் திரைப்படங்களின் முக்கியமான கவிஞர்களாக அறியப்பட்டனர். இளையராஜாவின் சமீப கால பாடல்களில் சேரனுக்கு இருந்த இணக்கமின்மையைஅவருடன் பணியாற்றிய காலங்களில் அறிந்திருக்கிறேன்.(2004). இப்போது கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு (தேசியகீதம் திரைப்படத்திற்கு) பிறகு இளையராஜாவுடன் இணைந்திருக்கும் தருணத்தில் அவரது…
